தமிழ் சினிமாவில் மிக பிஸியான நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் வெளியாகவுள்ளது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் கிருஷ்ணா ரோகந்த் என்பவர் இயக்கியுள்ளார். இதில் தன்னுடைய அடையாளத்தை தேடி அலையும் ஒரு அகதியின் வாழ்க்கையை படமாக்கியுள்ளனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், நடிகர் ராஜேஷ், மறைந்த நடிகர் விவேக், இயக்குனர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா உள்ளிட்டோ நடித்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகிறது. இயக்குனர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகமாக இது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியே இயக்கியுள்ளார்.
பிச்சைக்காரன் முதல் பாகத்தில் அம்மா - மகன் செண்டிமெண்டை படமாக்கியிருந்தனர். இந்த இரண்டாவது பாகத்தில் அண்ணன் - தங்கை பாசத்தை படமாக்கியுள்ளார். விஜய் ஆண்டனி முதல் பாகம் போல இந்த இரண்டாவது பாகமும் பெரும் வெற்றியை பதிவு செய்யும் என படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் இந்த வாரம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாக்கியுள்ளனர்.
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் சந்தோஷ் பிரதாப், பிக் பாஸ் ஆரவ், மகத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தயால் பத்மநாபன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த கூட்டணியில் கொன்றால் பாவம் என்ற திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இந்த திரைப்படமும் இடம்பெறும் என வடக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா தயாரிப்பில் மாடர்ன் லவ் என்ற இணைய தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஆந்தாலஜி வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 6 எபிசோடுகளாக உருவாகி இருக்கும் மார்டன் லவ் இணைய தொடரை ராஜூ முருகன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஆறு பேர் இயக்கியுள்ளனர்.
காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த இணைய தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor varalakshmi, Actor Vijay Sethupathi, Vijay Antony