முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் முதன்மை கதாப்பாத்திரம் தீவிரவாதி அல்ல - ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்

என் முதன்மை கதாப்பாத்திரம் தீவிரவாதி அல்ல - ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்

ஐஸ்வர்யா தத்தா - ஐஸ்வர்யா ராஜேஷ் - அனுமோல்

ஐஸ்வர்யா தத்தா - ஐஸ்வர்யா ராஜேஷ் - அனுமோல்

அடிப்படை மனிதர்களிடம் உள்ள உளவியலை பேசக்கூடிய படம் தான் ஃபர்ஹானா என இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்ரீம் வாரியர்ஸ் எஸ். பிரகாஷ் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரிக்க, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. இப்படத்திற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் நேற்று(12.05.2023) வெளியானது. படம் இஸ்லாமிய பின்புறத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதால் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தன.

அதற்கான விளக்கத்தை கொடுப்பதற்கு இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் பேசினர்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசும்போது, ''உங்களுக்கு எந்த பிரச்னை இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள் என்று அரசு தரப்பிடமிருந்து ஒத்துழைப்பு வந்துள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தருகிறோம். ஆகையால், நீங்கள் படத்தை தாராளமாக வெளியிடலாம் என்று உறுதியளித்தார்கள். இதெல்லாம் நாங்கள் கேட்காமலேயே அரசு தானாக முன்வந்து உதவி செய்துள்ளது.

விஷால் - எஸ்.ஜேசூர்யாவின் 'மார்க் ஆண்டனி' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம் வெளியாவதற்கு முன்பே படத்தை அவர்கள் பார்த்து யாரெல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களோ அவர்களிடம் என்னென்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அதை எங்களிடம் இருந்து பெற்றுக்கொடுத்தார்கள். அதற்காக எங்கள் நிறுவனம் சார்பாகவும் எங்கள் படக்குழுவினர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதல் காட்சியை பார்த்த பிறகு மக்கள் சர்ச்சைக்குரியதாக இல்லை இன்று தெரிவித்ததால் காவல்துறை பாதுகாப்பை விலக்கிக் கொண்டது.

ஒரே ஒரு நாட்டில் மட்டுமே இந்த படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. மற்ற அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்தைக் காண எதிர்ப்பு இருந்தது. ஆனால், நாங்கள் அதற்கான விளக்கம் கொடுத்த பிறகு எதிர்ப்பை வாபஸ் பெற்றுவிட்டார்கள். படம் வெளியான பின்பு இந்த படத்தின் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவுமில்லை என்று பார்வையாளர்களே கூறினார்கள் என்றார்.

இயக்குநர் நெல்சன் பேசும்போது, ''ஃபர்ஹானா படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால், அதற்கான மையப்புள்ளி எது என்பதைத் தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அதைத்தவிர இப்படத்திற்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படத்தை சர்ச்சை பொருளாக்க வேண்டும் என்று முயற்சி செய்ததுதான் இதற்கு காரணம். இரண்டு வாரம் ஓடக்கூடிய ஒரு படத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. அரசுக்கும் காவல்துறைக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன.

அதை விட்டுவிட்டு இப்படத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பிற்காக திரையரங்கில் காவல்துறை  நிற்பது எனக்கு குற்ற உணர்வாகவுள்ளது. ஃபர்ஹானா மற்ற படங்களை போல சாதாரணமாக வந்து பார்த்து செல்லக்கூடிய படம் தான். இதில் சர்ச்சைக்கான காரணம் எந்த இடத்திலும் இல்லை என்பதை தெரிவிப்பதற்காக தான் இந்த சந்திப்பை உருவாக்கியிருக்கிறோம்.

சர்ச்சையில் ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ, என் தயாரிப்பாளருக்கோ இல்லை. இரண்டாவது எனக்கு மதம் சார்ந்து ஹிந்து - முஸ்லிம் என்று பேசுவது அசௌகரியமாக உள்ளது. அது தாண்டி பேச வேண்டும் என்பதற்கு ஆரம்பப்புள்ளியாக இப்படத்தை நினைக்கிறேன். ஆகையால், இந்தப் படத்தோடு மத சாயத்தைப் பற்றி பேசுவதை கைவிட்டு விடலாம்.

அனைவரும் வாருங்கள், படத்தை பாருங்கள், அது பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

ஒரு கைப்பேசி இருந்தால் யாரிடம் இருந்தும் எந்த நேரத்திலும் அழைப்புகள் வரலாம் என்று இங்குள்ள அனைத்து பெண்களுக்கும் தெரியும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வக்கிரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு யூடியூப்-ல் வரும் கமெண்ட் தான். அடிப்படை மனிதர்களிடம் உள்ள உளவியலை பேசக்கூடிய படம் தான் ஃபர்ஹானா.

இந்தப் படம் சென்சாருக்கு சென்றபோது, அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். அதுவும் குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறியது எங்களை உற்சாகப்படுத்தியது. மேலும், நான் என் படத்திற்கு சர்ச்சை உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த எண்ணத்திற்காகவும் படம் எடுக்கவில்லை.

எனக்கு தெரிந்த வகையில், ஒரே ஒரு திரையரங்கில் அதுவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் செய்திகளில் ஃபர்ஹானா ரத்து என்று மொட்டையாக தலைப்பிட்டு வரும்போது, படத்திற்கு மிகப்பெரிய தடங்கலாக அமைகிறது. அதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் படத்தை பார்க்க அனைவரும் வருவார்கள். படத்தின் மீது இருக்கும் சர்ச்சை தானாகவே விலகும்.

top videos

    என் முதன்மையான கதாபாத்திரம் தீவிரவாதி அல்ல. குடும்பத்தையும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் செழிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள். என்னுடைய மற்றொரு முக்கியமான கதாபாத்திரம், தன்னுடைய மனைவிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய இஸ்லாமிய கணவன். தன் மகளைத் தவறாக புரிந்து கொண்டு பிறகு மன மாற்றம் அடையக்கூடிய இஸ்லாமிய பெரியவர். இதுவே போதுமான வித்தியாசம் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

    First published:

    Tags: Actress Aishwarya Rajesh