முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நெல்சனின் அடுத்த படத்தை தயாரிக்கும் கமல் - ஹீரோ யார் தெரியுமா?

நெல்சனின் அடுத்த படத்தை தயாரிக்கும் கமல் - ஹீரோ யார் தெரியுமா?

கமல்ஹாசன் - நெல்சன் திலீப்குமார்

கமல்ஹாசன் - நெல்சன் திலீப்குமார்

கமல்ஹாசன் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் திலீப் குமார் தற்போது ரஜினி படத்தை இயக்கிவருகிறார். அந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகிறது. அதை முடித்த பின் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படத்தை அவர் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.  இதற்காக நடிகர் கமல்ஹாசனை சந்தித்து நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளார்.

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்தபின் சேகர் கம்முலா, எச்.வினோத் படங்களில் நடிக்கவுள்ளார். அதேசமயம் சன் நிறுவனம் தயாரிப்பில் அவரே ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். அந்த நான்கு படங்களை முடித்துக்கொண்டு நெல்சன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க |  ரசிகரை இழுத்து வீசிய பாதுகாவலர்.. பதறிப்போன ராஷ்மிகா.. செல்ஃபிக்காக நடந்த பரபர சம்பவம்! 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் தோல்வியடைந்தது.  அந்த திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், விஜய் ரசிகர்களும் விமர்சனம் செய்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் நெல்சன் திலீப் குமார்.  அந்த தோல்விக்கு பதில் சொல்லும் விதமாக தற்போது ஜெயிலர் திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து அவரின் அடுத்த படங்கள் அமையும் என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

அதுவும் ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைந்தால் அவர் நிச்சயம் கமல்ஹாசன் படத்தை இயக்குவார் என தெரிவிக்கின்றனர். இருந்தாலும் அதற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவர் படம் இயக்குவது உறுதி எனவும் தெரிவிக்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Actor Dhanush, Kamal Haasan, Nelson dilipkumar