முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குழந்தைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

குழந்தைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

நயன்தாரா - விக்னேஷ்சிவன்

நயன்தாரா - விக்னேஷ்சிவன்

Nayanthara babies name | நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் உண்மையான பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.

First published:

Tags: Baby, Nayanthara, Vignesh Shivan