முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கடவுள் ஆசிர்வதிக்கட்டும்... ரஜினியின் ஆதரவுடன் துவங்கிய நயன்தாரா படம் - வைரலாகும் வீடியோ

கடவுள் ஆசிர்வதிக்கட்டும்... ரஜினியின் ஆதரவுடன் துவங்கிய நயன்தாரா படம் - வைரலாகும் வீடியோ

நயன்தாரா - ரஜினிகாந்த்

நயன்தாரா - ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் ஆசிர்வாதத்துடன் நடிகை நயன்தாராவின் லேடி சூப்பர்ஸ்டார் 75 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாராவின் 75வது படம் கடந்த வருடமே அறிவிக்கப்பட்டநிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று துவங்கியிருக்கிறது. இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.

இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோஸ், ஷாத் ஸ்டுடியோஸ், டிரிடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

top videos

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. விழாவில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது கிளாப் போர்டில் நடிகர் ரஜினிகாந்த், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கையெழுத்திட்டார். தற்போது சமூக வலைதலங்களில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Nayanthara, Rajinikanth