நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணமானது.
இந்த நிலையில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதளம் பகுதியில் கடந்த அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார். வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. திருமணமான நான்கே மாதங்களில் நாங்கள் இரண்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனோம் என விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விசாரணைகள் நடைபெற்றது. ஆனால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி. இந்த இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக நயன்தாரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
Also read... இவ்வளவு க்யூட்டான இந்த குழந்தை விஜய் பட நடிகை... யாருன்னு தெரியுதா?
இந்நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து திருமண நாளை வீட்டில் கொண்டாடி இருக்கின்றனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் நவீன் புல்லாங்குழல் வாசித்து இருக்கிறார். அதை விக்னேஷ் சிவன் அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த நயன்தாரா கண் கலங்கி அழ தொடங்கி விடுகிறார்.
View this post on Instagram
இதுக்குறித்த விக்னேஷ் சிவன் தன்னுடைய பதிவில், “எங்களின் எளிமையான அதே சமயம் சிறப்பான தருணங்கள். இது எங்களின் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம். நவீன் உன்னுடன் நான் வளர்ந்தேன். உன்னுடன் ஒரே மேடையில் டிரம்ஸ் வாசித்தேன். என் வாழ்க்கையின் பல நிலைகளில் நீ வாசித்ததை கேட்டுள்ளேன். ஆனால் இந்த நிலை தான் நம் அனைவரின் மறக்க முடியாத சிறப்பானது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.