முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நயன்தாராவின் 75-வது படம் பூஜையுடன் துவக்கம்!

நயன்தாராவின் 75-வது படம் பூஜையுடன் துவக்கம்!

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவின் 75-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா தற்போது ஜவான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் வேலைகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். தற்செயலாக, இது அவரின் 75-வது படம்.

தற்காலிகமாக 'நயன்தாரா 75' என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 18-ஆம் தேதியன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் சத்யராஜ், ஜெய் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தில் அவருக்கு அப்பாவாக சத்யராஜும், காதலராக ஜெய்யும் நடித்திருந்தனர். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடியும். ஆகையால் நயன்தாராவின் 75-வது படத்திலாவது அவர்கள் இணைவார்களா என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் ஜதின் சேத்தி கூறுகையில், “நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிப்பது பெருமையாக இருக்கிறது. இறுதியாக படப்பிடிப்பு தொடங்கியதில் மகிழ்ச்சி” என்றார்.

நயன்தாராவின் 75-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். அதோடு இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Nayanthara