முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்ஜிஆரால் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்துக்கு இசையமைத்த சங்கர் - கணேஷ்...!

எம்ஜிஆரால் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்துக்கு இசையமைத்த சங்கர் - கணேஷ்...!

நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன் படத்தின் மூலமான தெலுங்குப் படம் தமிழில் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்பட்டாலும், நான் ஏன் பிறந்தேன் வெளியான போது, அதனை அனேகமாக அனைவரும் மறந்திருந்தனர்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அக்னினேனி நாகேஸ்வர ராவ், சாவித்ரி நடிப்பில் 1953 இல் பிரட்டுக்கு தெரிவு என்ற படம் வெளியானது. இதில் மோகன் ராவ் என்ற வேடத்தில் நாகேஸ்வர ராவ் நடித்திருந்தார். தனது பெரிய குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு மோகன் ராவுக்கு இருக்கும். அரைகுறை பட்டினி. அதனால் வேலை தேடி பட்டணம் செல்வார். இறுதியில் ஒரு மிராசுதாரரிடம் வேலைக்கு சேர்வார். குடும்பம் இல்லாதவர்களுக்கே வேலை என்ற மிராசுதாரரின் கொள்கை காரணமாக, தனக்கொரு பெரிய குடும்பம் இருப்பதை மறைத்து வேலையில் சேர்வார்.

படிப்பு முடித்து வீடு திரும்பும் மிராசுதாரரின் மகளுக்கு மோகன் ராவ் மீது காதல் ஏற்படும். இந்த நேரத்தில், அவர் அனுப்பும் பணத்தை அவரது சகோதரியும், புருஷனும் எடுத்துவிட்டு, அம்மா உள்பட மற்றவர்களை அம்போ என விட்டு விடுவார்கள். மகனிடமிருந்து எந்த செய்தியும் வராமல் போக, மோகன் ராவின் அம்மா அவரைத் தேடி பட்டணம் வருவார். கிராமத்து வீடு ஏலத்துக்கு வர, மோகன் ராவின் சகோதரியும் பட்டணம் கிளம்புவார். அவர்களை மிராசுதாரரின் கண்ணில் படாமல் மோகன் ராவ் மறைக்க படாதபாடு படுவார். இறுதியில் என்னானது என்பது கதை.

இதில் மிராசுதாரரின் மகளாக சாவித்ரி நடித்தார். மிராசுதாரராக ரங்காராவ் சிறப்பு செய்திருந்தார். பி.எஸ்.ராமகிருஷ்ண ராவின் இயக்கமும், கண்டசாலாவின் இசையும், நாகேஸ்வர ராவ், சாவித்ரியின் நடிப்பும் படத்தை வெற்றி பெறச் செய்தது. இந்தப் படத்தை தமிழில் பலே ராமன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். பிறகு 1972 இல் மலையாளப் பட இயக்குனர் எம்.கிருஷ்ணன் நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். எம்.ஜி.ராமச்சந்திரன், அவரது மனைவியாக கே.ஆர்.விஜயா, அவரை காதலிக்கும் முதலாளியின் மகளாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

நான் ஏன் பிறந்தேன் படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தனர். அவர்கள் இசையமைத்த ஒரே எம்ஜி ராமச்சந்திரன் படம் இது. எப்படி இந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது?

Also read... காமமும் காதலுமே வில்லன்.. ரஜினி - கமல் நடித்த ’ஏ’ சான்றிதழ் படம்.. சுவாரஸ்ய தகவல்கள்!

நான் ஏன் பிறந்தேன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வேலுமணி (சங்கர்) கணேஷின் மாமனார். நான் ஏன் பிறந்தேன் படத்துக்கு மருமகனை இசையமைப்பாளராக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், மாமனார் என்பதால் மருமகனை இசையமைப்பாளராக்கிவிட்டார் என்று கூறிவிடுவார்களே என வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வதென முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் எம்ஜிஆர் காதுக்கு போயிருக்கிறது. சங்கர் - கணேஷ் திறமையான இளைஞர்கள். அவர்களே படத்துக்கு இசையமைக்கட்டும். உங்களின் மருமகன் என்பதற்காக வாய்ப்பை மறுக்கக் கூடாது என்று சொல்ல, சங்கர் - கணேஷ் எம்.ஜி.ஆர் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றனர். நான் ஏன் பிறந்தேன்..., நான் பாடும் பாடல்... போன்ற காலத்தால் அழியாத பாடல்களை போட்டு சங்கர் - கணேஷ் எம்ஜி ராமச்சந்திரனின் படப்பட்டியலில் இடம் பிடித்தனர்.

நான் ஏன் பிறந்தேன் படத்தின் மூலமான தெலுங்குப் படம் தமிழில் 'டப்' செய்யப்பட்டு வெளியிடப்பட்டாலும், நான் ஏன் பிறந்தேன் வெளியான போது, அதனை அனேகமாக அனைவரும் மறந்திருந்தனர். எம்ஜி ராமச்சந்திரன் நடித்த ஒரேயொரு முழுநீள குடும்பப் படம் இதுதான். அடிதடி ப்ரியர்களான அவரது ரசிகர்களுக்கு படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பத்து வாரங்களே ஓடி, 100 நாள் சாதனையை படம் தவறவிட்டது.

1972 ஜுன் 9 வெளியான நான் ஏன் பிறந்தேன் தற்போது 51 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema