முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வித்யாசாகர் மகனா இது? அச்சு அசல் அப்பா மாதிரியே குரல் - வைரலாகும் வீடியோ

வித்யாசாகர் மகனா இது? அச்சு அசல் அப்பா மாதிரியே குரல் - வைரலாகும் வீடியோ

வித்யாசாகர் - ஹர்ஷவர்தன் - மானசி

வித்யாசாகர் - ஹர்ஷவர்தன் - மானசி

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தனின் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அப்படி போடு என்ற அதிரடி குத்து பாடலாக இருந்தாலும் சரி, அதற்கு நேர் மாறாக மலரே மௌனமா என்ற மெலோடி பாடலாக இருந்தாலும் அனைத்து ஜானர்களிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். தூள், அன்பு, பார்த்திபன் கனவு, தித்திக்குதே, திருமலை, இயற்கை இவை அனைத்தும் வித்யாசாகர் இசையில் 2003 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முக்கியமானவை.

ஒரே வருடத்தில் எவ்வளவு வெரைட்டியான ஜானர் படங்கள் என்றாலும் அதற்கேற்ப ஹிட் பாடல்களைக் கொடுக்கக் கூடியவர். குறிப்பாக சந்திரமுகி என்ற ஹாரர் படம் என்றாலும், அன்பே சிவம் போன்ற மெலோ டிராமா என்றாலும், கில்லி, திருமலை போன்ற அதிரடி ஆக்சன் மசாலா என்றாலும் அதற்கு ஏற்ப சரியான இசையை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தவர்.

இதையும் படிக்க | ரஜினி, கமல் படங்களின் நடிகைக்கு எய்ட்ஸ்.. வாட்டிய வறுமை.. மனதை உருக்கும் கடைசி காலம்!


இவ்வளவு திறமையான இசையமைப்பாளராக இருந்தபோதிலும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் போன்று கொண்டாடப்பட்டாரா என்றால் அது சந்தேகம் தான். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசை நிகழ்ச்சியில் அவரைக் கொண்டாடித்தீர்த்தார்கள் ரசிகர்கள். ரசிகர்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோனார் வித்யாசாகர்.


இந்த நிலையில் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக கடந்த வருடம் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் வித்யாசாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


அப்போது அவருடன் வந்த ஹர்ஷவர்தன்,  ராமன் தேடிய சீதை படத்தில் வித்யாசாகர் பாடிய, ''என்ன புள்ள செஞ்ச நீ'' பாடலை பாடி தனது தந்தையை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

top videos

    இந்த நிலையில் ஹர்ஷவர்தன் சூப்பர் சிங்கர் பிரபலங்களான சிவாங்கி, பிரியங்கா, மானசி ஆகியோருடன் இணைந்து தனது அப்பாவின் பாடல்களுக்கு கவர் வெர்ஷனை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பார்ப்பதற்கு மட்டுமல்ல குரலும் அப்படியே அப்பா மாதிரியே என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

    First published:

    Tags: Music director