முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல இசையமைப்பாளர் திடீர் மறைவு - பிரபலங்கள் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் திடீர் மறைவு - பிரபலங்கள் இரங்கல்

இசையமைப்பாளர் ராஜ்

இசையமைப்பாளர் ராஜ்

இரட்டை இசையமைப்பாளர்களான ராஜ் - கோட்டி ஆகியோரில் ராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜ் - கோட்டி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் 90களில் தெலுங்கு பிரபல இசையமைப்பாளர்களாக வலம் வந்தார்கள். தமிழிலும் 'ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்' என்ற படத்துக்கு இருவரும் இசையமைத்துள்ளனர். இவர்களில் ராஜ் தனியாக 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ராஜ் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ராஜின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |  யுவன் இசையில் விஜய் பாடிய பாடல் எது தெரியுமா ? ஆனா அந்தப் படத்துல விஜய் நடிக்கல

இந்த நிலையில் இசையமைப்பாளர் ராஜின் மறைவுக்கு  பிரபல நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ராஜ் மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ராஜ் மிகத் திறமையானவர். நான் திரையுலக வாழ்வைத் தொடங்கிய காலத்தில் அற்புதமான பாடல்களைக் கொடுத்து என் படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தார். அவரது பாடல்கள் என்னை மக்களிடையே கொண்டுசேர்த்தது. அவரது மறைவு இசையுலகுக்கு பேரிழப்பு. அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Died, Music director