முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எனக்காக கோடம்பாக்கம் பாலத்தில் மனோபாலா காத்திருப்பார்... இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோ...!

எனக்காக கோடம்பாக்கம் பாலத்தில் மனோபாலா காத்திருப்பார்... இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோ...!

மனோபாலா - இளையராஜா

மனோபாலா - இளையராஜா

எனக்காக கோடம்பாக்கம் பாலத்தில் காத்திருப்பார் என நடிகர் மனோபாலா குறித்து நினைவுகளை இளையராஜா பகிர்ந்துகொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறவால் காலமானார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, ''என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நண்பர் நடிகர், இயக்குநர் மனோபாலா காலமான செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் சொந்தமாக டைரக்டரானார்.

இதையும் படிக்க |  இயக்குநர் மனோபாலா கடைசியாக பகிர்ந்த ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் சோகம்...!

எல்லா காலங்களிலும் என்னை சந்தித்து வருபவர். நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டுகின்ற நேரத்தில் பாலத்தில் நான் வருகின்ற நேரத்துக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். பின்னர் நடிகரானாலும், இயக்குநரானாலும் அவ்வப்போது வந்து இசை  ரெக்கார்டிங் நேரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்” என்று பேசினார்.

First published:

Tags: Actor, Ilaiyaraja