முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலைகள் அனைவருக்கும் சொந்தமானது... நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் ட்வீட்!

கலைகள் அனைவருக்கும் சொந்தமானது... நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் ட்வீட்!

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிள் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத வீடியோவை பகிர்ந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.

மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். மாநாடு படம் போலவே வெந்து தணிந்தது காடும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'பத்து தல'. மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி,  மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் சார்பில்  கே.ஈ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

பத்து தல படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்க்குகளில் வெளியாகியிருக்கிறது. துணிவு, வாரிசு படங்களுக்கு நடந்ததுபோலவே அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

'பத்து தல' படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என்பதால் தடுத்தோம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளிபடுத்தியுள்ளார். அதில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. என்றும் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Gv praksh kumar, Silambarasan