இந்திய திரையுலகின் ஜாம்பவானாக கருதப்படுபவர் அமிதாப் பச்சன். அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக உள்ளார். 80 வயதை தொட்டாலும் இன்னும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று அவர் நடித்து வருகிறார். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டிருக்கும் அமிதாப், படிப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் உரிய வேளைக்கு வரும் பழக்கத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.
அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து, அது பின்னர் சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு அமிதாப் பச்சன் தனது படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள மும்பை நகரில் பயணித்துள்ளார். அந்த நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டுள்ளது.
எனவே, உரிய நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சேர்வது கடினம் என்று உணர்ந்த அமிதாப், அதிரடியாக தனது காரில் இருந்து இறங்கியுள்ளார். அவ்வழியாக பைக்கில் பயணித்தவரிடம் லிப்ட் கேட்டு உரிய நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.
மஞ்சள் நிற டி-ஷர்ட், தொப்பி அணிந்திருந்த அந்த நபர் அமிதாப்பை பைக்கில் அழைத்து சென்ற அப்புகைப்படத்தை அமிதாப் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல, மற்றொரு பாலிவுட் பிரபலமான நடிகை அனுஷ்கா சர்மாவும் மே 15ஆம் தேதி அன்று டிராபிக் காரணமாக காரில் செல்லாமல் பைக்கில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவின.
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து லைக் செய்து வந்தாலும், பல இணையவாசிகள் மும்பை போலீசை குறைவைத்து கேள்விகளை எழுப்ப தொடங்கினர். விவகாரம் என்னவென்ற இரண்டு சம்பவங்களிலும், பைக்கில் பயணித்த யாரும் ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை என்பதே. சாதாரண மக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் டிராபிக் போலீசார் படாதபாடுபடுத்தி வைக்கிறீர்களே.
இதையும் படிங்க: தளபதி விஜய் - லோகேஷின் லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி ? ஆனால் இப்படி ஒரு ட்விஸ்டா?
அப்படியிருக்க பிரபலங்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வது மட்டும் உங்கள் கண்களில் தென்படாதா என்று கேள்வி எழுப்பி வந்தனர். தொடர்ச்சியாக இது போன்ற புகார்கள் கமெண்டுகளின் வாயிலாக எழவே, மும்பை போக்குவரத்து காவல்துறை களத்தில் இறங்கி நிலைமை சீர் செய்தது. அமிதாப், அனுஷ்கா சர்மாவை அழைத்து சென்ற நபர்களுக்கு மும்பை காவல்துறை அபராதம் விதித்தது. மேலும், அவர்கள் அபராதத்தை கட்டிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amithab bachchan, Anushka Sharma