முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக்பாஸ் போட்டியாளரின் அநாகரிக செயல் - கோபத்தில் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய மோகன்லால்

பிக்பாஸ் போட்டியாளரின் அநாகரிக செயல் - கோபத்தில் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால்

பிக்பாஸ் போட்டியாளரின் செயலால் நிகழ்ச்சியை பாதியில் மோகன்லால் நிறுத்திய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல் தொகுத்து வழங்குவதுபோல மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிவருகிறார். மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு முன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று போட்டியாளர் ஒருவரின் செயலால் பிக்பாஸ் நிழச்சியை மோகன்லால் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஈஸ்டரை முன்னிட்டு எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சியை உற்சாகமாக தொடங்கினார். இந்த நிலையில் போட்டியாளர் அகில் மாறார் என்பவர் தனது சக போட்டியாளர்களான ஏஞ்சலினா, சாகர் ஆகியோர் மீது மோசமான வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்காக அவரை மோகன்லால் மன்னிப்பு கேட்க சொன்னார். மேலும் தனது கேப்டன் பேண்டை சாகரிடம் ஒப்படைக்க சொன்னார்.

ஒப்புக்காக மன்னிப்புக்ககேட்ட அகில், கேப்டன் பேண்டை சாகரிடம் கொடுப்பதற்கு பதில் வீசி எறிந்திருக்கிறார். தன் கண் முன்னே அகில் இப்படி நடந்துகொண்டது மோகன்லாலுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து நான் ஈஸ்டரை உங்களுடன் கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலிருந்து பல மணி நேரம் பயணம் செய்துவருகிறேன். உடனடியாக லைவை நிறுத்துங்கள் என்று கத்திவிட்டு மோகன்லால் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். பிக்பாஸ் குழுவையும் அழைத்து கோபத்தில் திட்டியிருக்கிறார்.

பின்னர்  அகில் மாறார் மற்றும் சாகரை இருவரையும் பிக்பாஸ் அழைத்து கண்டித்திருக்கிறது. பின்னர் மோகன்லாலை பிக்பாஸ் குழுவினர் சமாதானப்படுத்தி தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்த வைத்திருக்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Bigg Boss Tamil, Mohanlal