முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பகாசூரன் ஓடிடி ரிலீஸ் தேதி.. இயக்குநர் மோகன்.ஜி பகிர்ந்த லேட்டஸ்ட் தகவல்!

பகாசூரன் ஓடிடி ரிலீஸ் தேதி.. இயக்குநர் மோகன்.ஜி பகிர்ந்த லேட்டஸ்ட் தகவல்!

செல்வராகவன்

செல்வராகவன்

இதனையடுத்து ரிச்சர்டு ரிஷி நடிப்பில் உருவாகும் படத்தை மோகன்.ஜி இயக்கவிருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த பகாசூரன் படம் கடந்த 17 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை மோகன்.ஜி தனது ஜிஎம் ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருந்தார்.

மோகன்.ஜியின் கடந்த படங்களைப் போலவே இந்தப படமும் சர்ச்சையில் சிக்கியது. இந்தப் படத்தில் ராதாரவி, கே.ராஜன், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஃபாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை வெளியிட்ட ஜிடிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம், இயக்குநர் மோகன் ஜிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில் இந்தப் படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தகவலை இயக்குநர் மோகன்.ஜி பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    இதனையடுத்து ரிச்சர்டு ரிஷி நடிப்பில் உருவாகும் படத்தை மோகன்.ஜி இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட மோகன்.ஜி, இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    First published:

    Tags: Selvaraghavan