முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்தின் தந்தை உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அஜித்தின் தந்தை உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அஜித்தின் தந்தை உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

அஜித்தின் தந்தை உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் நேரில் வந்து நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமார் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை தூக்கத்திலையே உயிரிழந்தார். 86 வயதான இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் நேரில் வந்து நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பிரபலங்கள் வர வாய்ப்பு உள்ளதால் நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அஜித்தின் தந்தை உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Ajith, Udhayanidhi Stalin