முகப்பு /செய்தி /entertainment / 'மாவீரா' படத்திற்கு தடைகோரிய வழக்கு : இயக்குநர் கவுதமனுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'மாவீரா' படத்திற்கு தடைகோரிய வழக்கு : இயக்குநர் கவுதமனுக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இயக்குநர் கவுதமன் மற்றும் குருவின் மகன் கனலரசன்

இயக்குநர் கவுதமன் மற்றும் குருவின் மகன் கனலரசன்

Maveera Movie | படத்தில் தங்கள் தந்தையை தவறான முறையில் சித்தரித்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ள குருவின் மகன் கனலரசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், பா.ம.க. மூத்த தலைவராகவும் இருந்த மறைந்த குருவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள மாவீரா படத்திற்கு தடை விதிக்கக் கோரி குருவின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தணிக்கை குழுவுக்கும், இயக்குனர் வ.கவுதமனுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர் சங்கத் தலைவராகவும், பா.ம.க. மூத்த தலைவராகவும் இருந்த மறைந்த குருவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, மாவீரா என்ற பெயரில் பிரபல இயக்குநர் வ.கவுதமன் திரைப்படம் எடுத்துள்ளார். தங்கள் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறவில்லை என்பதால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி குருவின் மகன் கனலரசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாவீரா படத்தை எடுக்கும் முன், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக கேட்டறிந்த இயக்குநர் வ.கவுதமன் படத்தை எடுக்கும்போது, அனுமதி பெறுவதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது படத்தை எடுத்துள்ளதாகவும், அதை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாகவும் பேட்டியளித்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடுரோட்டில்  நிர்வாணமாக சுற்றித்திரிந்த நடிகை - மனநல சிகிச்சை அளிக்க போலீசார் ஏற்பாடு!

படத்தில் தங்கள் தந்தையை தவறான முறையில் சித்தரித்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ள கனலரசன், இந்த படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு மார்ச் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தணிக்கை குழுவுக்கும் இயக்குநர் வ.கவுதமனுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Director Gowthaman