முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ட்விட்டரில் பணம் செலுத்தி புளூ டிக்... ரஜினி, விஜய் போன்ற பிரபலங்கள் புறக்கணிப்பு?!

ட்விட்டரில் பணம் செலுத்தி புளூ டிக்... ரஜினி, விஜய் போன்ற பிரபலங்கள் புறக்கணிப்பு?!

ட்விட்டர்

ட்விட்டர்

உலகில் பல சமூக வலைதளங்கள் இருந்தாலும், ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதில் கணக்கு வைத்துள்ள பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கருத்துகள், விமர்சனங்கள், தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டரில் பணம் செலுத்தி புளூ டிக் பெறும் முறையை பல தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

உலகில் பல சமூக வலைதளங்கள் இருந்தாலும், ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதில் கணக்கு வைத்துள்ள பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கருத்துகள், விமர்சனங்கள், தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டர் பயன்பாடு அதிகம் உள்ளதால், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள் என பலரும் அதில் செய்திகள் மற்றும் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து அவ்வபோது பதிவிடுகின்றனர். அது தவிர, திரை பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் நேரடியாக பேசவும் உதவுகிறது.

ட்விட்டரில் பல பயன் தரும் வசதிகள் இருந்தாலும், ஒருவருடைய பெயரில் யார் வேண்டுமானாலும், கணக்கு தொடங்கி போலியான செய்திகளையும், தகவல்களையும் பரப்ப முடியும். அது போன்ற பல சம்பவங்களும் நடந்துள்ளன. அதை தடுக்க பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு புளூடிக் முறையை டிவிட்டர் அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம் போலி தகவல்கள் தவிர்கப்பட்டன.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய உடன் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அதில் யார் வேண்டுமானாலும், புளூடிகை பணம் செலுத்தி பெற்றுகொள்ளலாம் என தெரிவித்திருந்தார். அதேபோல் ஏற்கனவே புளூடிக் பயன்படுத்துபவர்களும் பணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அத்துடன் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும் என காலக்கெடு வித்தித்தார். இல்லையெனில் புளூடிக் நீக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் எலன். இதனால் தங்கள் அடையாளத்திற்கு பணம் செலுத்த வேண்டுமா என்றும் கேள்வி எழுந்தது.

புளூடிக்கை பணம் கொடுத்து பலரும் வாங்கினர். அதை பயன்படுத்தி நடிகர்களின் ரசிகர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் அந்த ID களில் புளூடிக் இருப்பதால் பார்த்தவுடன் அவர்கள் அதிகாரப்பூர்வ நபர்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதனால் புளூ டிக் மீதான மதிப்பு குறைந்துவிட்டது.

Also read... வருடத்துக்கு 6 படம் கொடுத்த சிவாஜி.. முன்னால் பாவமன்னிப்பு.. பின்னால் பாசமலர்.. நடுவில் சிக்கிய புனர்ஜென்மம்.!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ புளூடிக்கை பயன்படுத்தி வந்த Legacy பயன்பாட்டாளர்களுக்கான காலகெடு நேற்றுடன் முடிவடைந்தது. இருந்த போதிலும் பலர் பணம் செலுத்தி தங்கள் அடையாளத்திற்கான புளூடிக் பெறும் முறையை புறக்கணித்துள்ளனர்.

குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், கார்த்தி, சிலம்பரசன், திரிஷா, இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் அதை புறக்கணித்துள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் போன்ற அரசியல் தலைவர்களும் புளூடிக் முறையை புறக்கணித்துள்ளனர். இதனால் அவர்களின் ட்விட்டர் பகுதியில் இருந்து புளூடிக் நீக்கப்பட்டள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Entertainment, Twitter