முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கங்கனா படத்தை இயக்குகிறேனா? அயோத்தி பட இயக்குநர் விளக்கம்!

கங்கனா படத்தை இயக்குகிறேனா? அயோத்தி பட இயக்குநர் விளக்கம்!

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

மீண்டும் தமிழ் படமொன்றில் நடிக்க கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை அயோத்தி படத்தை இயக்கிய இயக்குநர் மந்திரகுமார் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடித்த படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் வரும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் விபத்தில் இறக்கிறார். அந்தப் பெண்ணின் உடலை அயோத்தி எடுத்து செல்ல குடும்பத்தினரின் போராட்டமே அயோத்தி படத்தின் கதை. சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இந்தப் படம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் மந்திரமூர்த்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் ஏற்கனவே தாம்தூம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

பிறகு இந்தியில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார்.

Also read... மீண்டும் கலக்க வருகிறது தனி ஒருவன் ஜோடி... ஜெயம் ரவி, நயன்தாராவின் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில் மீண்டும் தமிழ் படமொன்றில் நடிக்க கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை அயோத்தி படத்தை இயக்கிய இயக்குநர் மந்திரகுமார் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி உள்ளது.

இந்த தகவலை மறுத்த இயக்குநர் மந்திரகுமார். என்னுடைய அடுத்த படம் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தான். ஆனால் அது கங்கனா நடிக்கும் படம் இல்லை. கூடிய விரைவில் என்னுடைய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Kangana Ranaut