நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த நடிகர் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வானது தி.நகர் சர் பி.டி. தியாகராஜா மகாலில் நடைபெற்று வருகிறது.
நிகழ்வில் பேசிய நடிகர் பொன்வண்ணன், ''மூவரோடும், நான் சினிமாத்துறைக்கு வந்த நாளிலிருந்து பயணித்துள்ளேன். மூன்று பேரும் மூன்று விதமான குணங்களை கொண்டவர்கள். மனோபாலா அண்ணனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். அடுத்த நாள் நேரத்தில் பேசிவிடுவார்.
புது டெக்னாலஜியை கற்றுக்கொள்ளதில் மனோபாலா அண்ணனுக்கு நிகர் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அனைவருக்கும் உதவி செய்வார்கள்'' என்று பேசினார்.
இதையும் படிக்க | விஜய் பிறந்தநாளுக்கு மாற்றம் வரும்... 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி... - விஜய் நற்பணி மன்ற நிர்வாகி தகவல்
பின்னர் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ''இப்படி ஒரு நிகழ்வு நடத்துவதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என்னால் நம்ப முடிகிறது. நானும் மனோபாலா அண்ணனும் நிறைய குசும்பு செய்வோம். அது அனைத்து கதாநாயகிகளுக்கும் தெரியும்.
நடிகர் சங்கம் துருபிடிச்சி கெடக்கு; நடிகர்கள் ரூ. 40, 50, 60 கோடிகள் சம்பளம் வாங்குறாங்க. ஆனா ஏன் நடிகர் சங்கம் துரு பிடிச்சி கெடக்குதுன்னு தெரில. பல அரசியல் சம்பவங்களை நடிகர் சங்கம் செய்தது. மிகப்பெரிய ஜாம்பவான்கள் வாழ்ந்த பூமி.
நான் நடிகர் சங்கம் கட்டடத்தில் இருந்த 25 தென்னை மரங்களுடன் பேசுவேன். விளையாடுவேன். ஆனால் இப்போது முடியவில்லை. மீண்டும் நடிகர் சங்கம் செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Mansoor ali khan