முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனோபாலா எல்லோரையும் கலகலப்பாக வைத்திருப்பார் - பாக்யராஜ்

மனோபாலா எல்லோரையும் கலகலப்பாக வைத்திருப்பார் - பாக்யராஜ்

மனோபாலா - பாக்யராஜ்

மனோபாலா - பாக்யராஜ்

மனோபாலா எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார் - பாக்யராஜ்

  • Last Updated :
  • Chennai, India

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட மனோபாலா, கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிபட்டு வந்தார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் நலம் தேறிய நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மனோபாலாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசுகையில், “திரைத்துறையில் இயக்குநராக தயாரிப்பாளராக இருந்தவர். அனைவரிடம் அன்பாக நட்பாக இருந்தவர். என்னுடைய படங்களில் நடித்துள்ளார். அவரை சுற்றி கலகலப்பாக வைத்திருப்பார். எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்.இவ்வளவு சீக்கிரம் இவருக்கு இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவருகும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடை வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்றார்.

First published:

Tags: Cinema, Entertainment, Tamil News