முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் மனோபாலா உடல் இன்று தகனம்..

நடிகர் மனோபாலா உடல் இன்று தகனம்..

நடிகர் மனோபாலா

நடிகர் மனோபாலா

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் மனோபாலாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chennai [Madras], India

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட மனோபாலா, கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிபட்டு வந்தார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் நலம் தேறிய நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் மனோபாலாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க : “ஏன் நண்பா... நான் இன்னும் சாகல... திரும்ப வருவேன்” - ரசிகருக்கு பதிலளித்த செல்வராகவன்

மேலும் நடிகர்கள் சிவக்குமார், ஆர்யா, சித்தார்த், கவுண்டமணி, சரத்குமார், ராதிகா, இயக்குநர்கள் மணிரத்தினம், அமீர் உள்ளிட்டோரும், மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்தும் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இதே போன்று, நடிகைகள் குட்டி பத்மினி, ஆர்த்தி, இசையமைப்பாளர் தீனா, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், ரவிமரியா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் உடல் இன்று காலை 10:30 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

top videos
    First published:

    Tags: Death, Entertainment, Tamil News