முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் மனோபாலா வெளியிட்ட கடைசி வீடியோ… 24 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்த துயர சம்பவம்...!

நடிகர் மனோபாலா வெளியிட்ட கடைசி வீடியோ… 24 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்த துயர சம்பவம்...!

கோவை சரளா - மனோபாலா

கோவை சரளா - மனோபாலா

Actor Manobala death | நடிகர் மனோபாலா வெளியிட்ட வீடியோவின் கமென்ட் பகுதியில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மனோபாலா தனது யூடியூப் சேனலான வேஸ்ட் பேப்பரில் (Waste Paper) நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுதான் அவரது கடைசி யூடியூப் வீடியோவாக மாறியுள்ளது. இந்த வீடியோவில் நடிகை கோவை சரளாவை நேர்காணல் செய்யும் மனோபாலா திரைத்துறை குறித்து உற்சாகத்துடன் பேசுகிறார். வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது உயிர் பிரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர, காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.

' isDesktop="true" id="963312" youtubeid="6rMDL9moR9g" category="cinema">

முன்னதாக நேற்று அவரது யூ டியூப் சேனலில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவரும் கோவை சரளாவும் பழம்பெரும் நடிகை மனோரமா குறித்து பேசுகின்றனர். 3 நிமிடம் 13 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் கலகலப்பாக பேசும் மனோபாலா திரைத்துறை நினைவுகளை பகிர்கிறார். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Kollywood