முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வரவேற்பை பெறும் 'குட் நைட்' படம்... காட்சிகளை அதிகரிக்கும் திரையரங்குகள்!

வரவேற்பை பெறும் 'குட் நைட்' படம்... காட்சிகளை அதிகரிக்கும் திரையரங்குகள்!

குட் நைட்

குட் நைட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி, ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா, சாந்தனு நடித்த இராவணக்கோட்டம், ஜெய் பீம் மணிகண்டன் நடித்த குட் நைட் ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தைவிட மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குட் நைட்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதால் அதற்கான காட்சிகள் தமிழகத்தில் அதிகரிக்கப்படுகின்றன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி, ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா, சாந்தனு நடித்த இராவணக்கோட்டம், ஜெய் பீம் மணிகண்டன் நடித்த குட் நைட் ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகின. இதில் கஸ்டடி திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் மற்ற படங்களை சுமார் 100 முதல் 120 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது.

அதிலும் குட் நைட் திரைப்படத்திற்கு குறைவான காட்சிகள் மற்றும் குறைவான திரையரங்குள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் குட் நைட் திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் படம் நேற்று வெளியான நிலையில் படத்தை பார்த்த ரசிகர்களும் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர்.

Also read... இப்போ இல்லை... குழந்தையிலேயே அவ்வளவு கியூட் - இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

இதன் காரணமாக குட் நைட் திரைப்படத்திற்கு திரையரங்குகளின் காட்சிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதிலும் ஒரு காட்சிகளை திரையிட்ட திரையரங்குகள் தற்போது மூன்று காட்சிகள், நான்கு காட்சிகள் என அதிகரித்துள்ளன. மேலும் வரும் திங்கட்கிழமை முதல் இந்த திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், இது போன்ற வரவேற்பு பெற்று நீண்ட நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது குட் நைட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு திரையரங்குகள் இந்தத் திரைப்படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகப்படுத்தப்படுவதால், சாந்தனுவின் ராவணக்கோட்டம் மற்றும் வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படங்களின் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Entertainment, Theatre