ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் உலக அளவில் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து அக நக பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இது வந்தியத் தேவன் - குந்தவைக்கு இடையேயான பாடலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய நடிகை சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய காதல் காட்சிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் - குந்தவை இடையேயான காதல் காட்சி தான் தனது ஃபேவரைட் எனவும் இரண்டாம் பாகத்தில் அந்த காட்சி பெரும் வரவேற்பு பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
The making of a masterpiece: A glimpse into @arrahman sir's magic♥
Music and Trailer Launch on 29th March at Jawaharlal Nehru Indoor Stadium, Chennai!
#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN… pic.twitter.com/WTknMkHxnB
— Madras Talkies (@MadrasTalkies_) March 26, 2023
இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பிற பாடல்கள் வருகிற 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரஹ்மான் இசையமைக்கும் வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தது படத்தின் புரமோஷனுக்கு பெரிதும் உதவியது. தற்போது இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவிருப்பதாக ஒரு தகவல் பரவிவருகிறது. இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொன்னியின் செல்வன் படத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்க திட்டமிட்டபோது வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha, Mani ratnam, Ponniyin selvan