கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கினார். இந்தப் படத்தில் ஆதித்த கரிகலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டையராக சரத் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் முதல் பாகம் பெரும் வெற்றிபெற்ற நிலையில் 2 ஆம் பாகம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட 10 நாட்களே இருப்பதால் படத்தை பிரபலப்படுத்தும் முனைப்பில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். நேற்று கோயம்புத்தூரில் நடந்த நிகழ்வில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, விக்ரம் பிரபு ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குநர் மணிரத்னத்திடம் ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக காட்டியதாக உருவான சர்ச்சை குறித்து நியூஸ் 18 செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மணிரத்னம், “பொன்னியின் செல்வன் படத்தில் மதத்தை ஏன் நுழைக்கிறீர்கள்? கல்கி எழுதியதை வைத்து உருவாக்கிய படம் இது. ராஜராஜ சோழனின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். பொன்னியின் செல்வன் தொடர்பாக அனாவசியமான சர்ச்சைகள் தேவையற்றவை” என்று பதிலளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mani ratnam, Ponniyin selvan