முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அக நக... வந்தியத்தேவன் - குந்தவையின் காதல் - 'பொன்னியின் செல்வன் 2' பட முதல் பாடல் அறிவிப்பு

அக நக... வந்தியத்தேவன் - குந்தவையின் காதல் - 'பொன்னியின் செல்வன் 2' பட முதல் பாடல் அறிவிப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து கார்த்தி - திரிஷா

பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து கார்த்தி - திரிஷா

வெளியான போஸ்டரில் கார்த்தியும், திரிஷாவும் இடம்பெற்றுள்ளதால் இந்தப் பாடல் வந்தியத்தேவன் - குந்தவைக்கு இடையேயான காதல் பாடலாக இருக்கக்கூடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொன்னியின் செல்வன்-2 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மார்ச் 29 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துகின்றனர்.

முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசியது படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. அதே போல பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் இருவரும் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடயே எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் முதல் பாடலை வரும் இருபதாம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். வெளியான போஸ்டரில் கார்த்தியும், திரிஷாவும் இடம்பெற்றுள்ளதால் இந்தப் பாடல் வந்தியத்தேவன் - குந்தவைக்கு இடையேயான காதல் பாடலாக இருக்கக்கூடும்.

அக நக என தொடங்கும் அந்த பாடலை ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மற்றும் அதன்பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தன. அதேபோல இந்தப் படத்தின் பாடல்களும், படமும் அதைவிட பெரும் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ponniyin selvan