முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2 இத்தனை கோடி வசூலா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

பொன்னியின் செல்வன் 2 இத்தனை கோடி வசூலா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

ஜெயம் ரவி - கார்த்தி

ஜெயம் ரவி - கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த 28 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக நாவல் படித்தவர்கள் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட்டனர்.

இதையும் படிக்க | 'கலைஞர்களுக்கு வயதானால்....' - இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய வைரமுத்து

இந்தப் படத்தின் திரைக்கதையை இளங்கோ குமாரவேல், மணிரத்னம், ஜெயமோகன் இணைந்து எழுதியிருந்தனர். ராஜ ராஜ சோழன் அரியனை ஏறிய வரலாற்றை எழுத்தாளர் கல்கி புனைவு கலந்து எழுதியிருந்தார். குறிப்பாக நந்தினி உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் நாவலுக்காக சேர்க்கப்பட்டன.

விமர்சனங்கள் இந்தப் படத்தின் வசூலை பெரிதாக பாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கேற் படம் வெளியான 10 நாட்களில் இந்தப் படம் ரூ.300 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Ponniyin selvan