முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல் பாகத்தை விட பொன்னியின் செல்வன் 2 அதிக வசூலா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

முதல் பாகத்தை விட பொன்னியின் செல்வன் 2 அதிக வசூலா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோ நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை சுமார் 800 திரையரங்குகளில் வெளியிட்டனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

இதையும் படிக்க | மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம்.. ஹீரோயின் இவரா? சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தை

top videos

    அதேபோல் தமிழகத்தில் மட்டும் நான்கு நாட்களில் 71 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நான்கு நாட்களில் 125 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் இந்த முறை 71 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இருந்த போதிலும் இந்த தொகை திருப்திகரமாக இருப்பதாக திரையரங்க வட்டாரத்தில் கூறுகின்றனர்.

    First published:

    Tags: Ponniyin selvan