முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருச்சியில் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் - வைரலாகும் போட்டோ

திருச்சியில் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் - வைரலாகும் போட்டோ

மணிரத்னம் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி - திரிஷா - விக்ரம்

மணிரத்னம் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி - திரிஷா - விக்ரம்

பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மணிரத்னம், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோர் திருச்சி வந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை மக்களிடம் கொண்டும் சேர்க்கும் விதமாக டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் என படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் திருச்சியில் நடைபெறும் பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி திருச்சி என்ஐடி கல்லூரியில் நடைபெறுகிறது. திருச்சி விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.




 




View this post on Instagram





 

A post shared by Suhasini Hasan (@suhasinihasan)



இதையும் படிக்க | ரியா விஸ்வநாதனின் புதிய சீரியல் சண்டக்கோழி!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்துக்கு மக்களிடையே ஆர்வம் குறைவாகவே இருந்துவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே படக்குழுவினரின் புரொமோஷன் நிகழ்ச்சி படத்துக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ponniyin selvan