முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2: வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது இப்படித் தான் - வெளியான வீடியோ

பொன்னியின் செல்வன் 2: வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது இப்படித் தான் - வெளியான வீடியோ

கார்த்தி

கார்த்தி

அந்த அளவுக்கு புகழ்பெற்ற வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்தை கார்த்தி ஏற்றிருந்தார். உடை முதல் ஹேர்ஸ்டைல் வரை அவர் வந்தியத் தேவன் வேடத்துக்கு தயாரானார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அக நக என்ற பாடல் வருகிற 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பாடலை ரக்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். வந்தியத் தேவன் - குந்தவி ஆகியோருக்கு இடையேயான காதலை சொல்லும் பாடலாக உருவாகியுள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் துவங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரை பலரும் படமாக்க முயற்சித்தனர். இயக்குநர் மணிரத்னமே கடந்த 2010 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை விஜய், மகேஷ் பாபு, விக்ரம் ஆகியோர் நடிப்பில் படமாக்க திட்டமிட்டார். படத்தின் பட்ஜெட் காரணமாக அப்பொழுது அந்தப் படம் கைவிடப்பட்டது. குறிப்பாக கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் நடிகர்கள் பலருக்கும் கனவு கதாப்பாத்திரமாக இருந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தான் இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டபோது வந்தியத்தேவன் வேடத்துக்கு ரஜினிகாந்த்தை நடிகர் சிவாஜி பரிந்துரைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவுக்கு புகழ்பெற்ற இந்தக் கதாப்பாத்திரத்தை கார்த்தி ஏற்றிருந்தார். உடை முதல் ஹேர்ஸ்டைல் வரை அவர் வந்தியத் தேவன் வேடத்துக்கு எப்படி தயாரானார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

First published:

Tags: Actor Karthi, Ponniyin selvan