முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆருத்ரா மோசடி வழக்கு- ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

ஆருத்ரா மோசடி வழக்கு- ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம்

ஆர்கே சுரேஷ்

ஆர்கே சுரேஷ்

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

ஆருத்ரா மோசடி வழக்கில், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரிய ஆர்.கே.சுரேஷின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆருத்ரா மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, பாஜக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் தொடர்பு இல்லை என வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரங்கள் இல்லை என்பதால் சம்மனை ரத்து செய்யப் போவதாக தெரிவித்தார். சம்மனை ரத்து செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல... 12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.க தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு

மேலும் சம்மன் குறித்து விளக்கம் பெற்றுத்தர அவகாசமும் கோரப்பட்டது. காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, இந்த வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published: