முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிச்சைக்காரன்- 2 ரிலீஸ் தொடர்பாக கோர்ட் முக்கிய உத்தரவு.. நீதிமன்றத்தில் முக்கிய விவரத்தைச் சொன்ன விஜய் ஆண்டனி..

பிச்சைக்காரன்- 2 ரிலீஸ் தொடர்பாக கோர்ட் முக்கிய உத்தரவு.. நீதிமன்றத்தில் முக்கிய விவரத்தைச் சொன்ன விஜய் ஆண்டனி..

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

Also read... அட.. இது நம்ம த்ரிஷாவா? பொன்னியின் செல்வன் குந்தவையின் க்யூட் போட்டோஸ்!

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Madras High court