நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு தொடர்களில் பங்கேற்று வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,000 வீரர்கள் பங்கேற்றனர். இதில் மகாராஷ்டிரா அணிக்காக வேதாந்த் பங்கேற்றிருந்தார். அதில் 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றுள்ளார்.
இதையும் படிக்க | பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வேதாந்த் 5 தங்க பதக்கங்களை வென்றார்.
இதுகுறித்து மாதவன் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது, ''மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கடவுளின் ஆசிர்வாதத்தாலும் உங்கள் வாழ்த்துக்களினாலும் வேதாந்த் இந்தியாவுக்காக 50மீ, 100மீ, 200மீ,400 மீ மற்றும் 1500 மீ ஆகிய பிரிவுகளில் 5 தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Madhavan