முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாணவி நந்தினி வீட்டுக்கு நேரில் விசிட்... தங்கப்பேனாவை பரிசளித்த வைரமுத்து!

மாணவி நந்தினி வீட்டுக்கு நேரில் விசிட்... தங்கப்பேனாவை பரிசளித்த வைரமுத்து!

நந்தினி குடும்பத்தினருடன் வைரமுத்து

நந்தினி குடும்பத்தினருடன் வைரமுத்து

திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினியின் இல்லத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சென்ற கவிஞர் வைரமுத்து, தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை கவிஞர் வைரமுத்து, அவரது வீட்டிற்கே சென்று பரிசாக வழங்கினார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

குறிப்பாக தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற இருவரில் நந்தினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தச்சுத் தொழிலாளியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சிகள் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மாணவி நந்தினி குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Also read... குறட்டையை மையமாக வைத்து வெளியான 'குட் நைட்' படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்!

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது பதிவில்,

ஒரு

தச்சுத் தொழிலாளியின் மகள்

மாநிலத் தேர்வில்

உச்சம் தொட்டிருப்பது

பெண்குலத்தின் பெருமை

சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற

தங்கப் பேனாவைத்

தங்கை நந்தினிக்குப்

பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;

நேரில் தருகிறேன்

உன் கனவு

மெய்ப்படவேண்டும் பெண்ணே!

என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினியின் இல்லத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சென்ற கவிஞர் வைரமுத்து, தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். வைரமுத்துவின் திடீர் வருகையால் உற்சாகத்தில் திளைத்துப்போன மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.மாணவியை ஊக்கப்படுத்தவே பேனா வழங்கப்பட்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Poet vairamuththu