முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் ஹீரோவாகும் சதீஷ் - மோஷன் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

மீண்டும் ஹீரோவாகும் சதீஷ் - மோஷன் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

நடிகர் சதிஷ்

நடிகர் சதிஷ்

நடிகர் சதிஷின் வித்தைக்காரன் பட மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காமெடி நடிகரான சதிஷ் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கிஷோர் இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனையடுத்து தற்போது வித்தைக்காரன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்கிறார்.

இதையும் படிக்க | தளபதியுடன் புரட்சித் தளபதி... விஷாலின் மார்க் ஆண்டனி டீசரை பாராட்டிய விஜய் - வைரலாகும் போட்டோஸ்

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், என்னுடைய உதவி இயக்குநர் வெங்கிக்கு வாழ்த்துகள். இவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். சதிஷ் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Actor Sathish