முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்த டார்கெட் ரஜினி.. லியோ படத்துக்கு பிறகு கைதி 2 இல்ல... - லோகேஷின் புதிய திட்டம்

அடுத்த டார்கெட் ரஜினி.. லியோ படத்துக்கு பிறகு கைதி 2 இல்ல... - லோகேஷின் புதிய திட்டம்

கார்த்தி - ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்

கார்த்தி - ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகே கைதி 2 படம் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துவருகிறார்.

இதனையடுத்து லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். தலைவர் 170 என அழைக்கப்படும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படமும் ஜெய் பீம் படம் போல உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 என அழைக்கப்படும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தின் பணிகளில் முடித்துவிட்டு தலைவர் 171 படத்தைத் துவங்கவிருக்கிறாராம். ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகே கைதி 2 படம் துவங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Lokesh Kanagaraj, Rajinikanth