முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஸ்பெஷல் ரோலில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்... ஆனால் லியோ இல்ல... வேற லெவல் தகவல்..!

ஸ்பெஷல் ரோலில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்... ஆனால் லியோ இல்ல... வேற லெவல் தகவல்..!

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லியோ படக்குழுவினர் காஷ்மீரிலிருந்து திரும்பிய நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் பட மாபெரும் வெற்றியால் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களின் பட்டியலில் லோகேஷ் இடம் பிடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தனது விக்ரம் படத்தில் முந்தைய பட கதாபாத்திரங்களை சரியான தருணங்களில் கொண்டுவந்து சுவாரஸ்யப்படுத்தினார். இதற்கு முன்பே ஜப்பானில் கல்யாணராமன் உள்பட சில படங்களில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டாலும் இயக்குநர் லோகேஷ் இதனை வெற்றிகரமாக செய்திருக்கிறார். இதனையடுத்து மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் போல எல்சியூ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது தளபதி விஜய்யின் லியோ படமும் எல்சியூவில் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்திருந்த மைக்கேல் படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் பெயருடன் வெளியாகியிருந்தது. இதன் ஒரு பகுதியாக பிரபல ஹீரோ படத்தில் சிறப்பு வேடத்தில் லோகேஷ் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜி தற்போது நடித்துவரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறாராம். இது சிங்கப்பூர் சலூன் படத்தின் புரமோஷனுக்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க; அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் நாளை தீர்ப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு..!

top videos

    லியோ படக்குழுவினர் காஷ்மீரிலிருந்து திரும்பிய நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனராம்.

    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj