ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ருத்ரன். பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தயாரித்த கதிரேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், சச்சு, ரெடின் கிங்ஸ்லே, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Thank you so much for your wishes brother 🙏🏼 https://t.co/Of7KoOocfD
— Raghava Lawrence (@offl_Lawrence) April 16, 2023
இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜேசகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் இதுவரை கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ருத்ரன் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ராகவா லாரன்ஸ் மாஸ்டர், கதிரேசன் உள்ளிட்ட ருத்ரன் பட குழுவினருக்கு ஆல் தி பெஸ்ட். படம் குறித்து நிறைய நல்ல விமர்சனங்களை கேட்கிறேன். வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lokesh Kanagaraj