முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் சரத்பாபு நம்பியாரின் மருமகனா? ஆச்சரியத் தகவல்

நடிகர் சரத்பாபு நம்பியாரின் மருமகனா? ஆச்சரியத் தகவல்

நம்பியார் - சரத்பாபு

நம்பியார் - சரத்பாபு

பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகளை இரண்டாவது திருமணம் செய்து விவாகரத்து செய்தவர் சரத்பாபு.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று உயிரிழந்தார்.

நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் தனக்கென இடம் பிடித்திருக்கிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

இதையும் படிக்க |  புஷ்பாவுக்கு ஷாக் கொடுத்த வெற்றி - பரபர கட்டத்தில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.!

இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சரத்பாபுவுக்கும் பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியாரின் மகள் சினேகா நம்பியாருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. சினேகா ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். முதல் திருமணத்தின்போது அவருக்கு தீபக் நம்பியார் என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் சரத்பாபுவின் மறைவு குறித்து தீபக் நம்பியார் பேசியதாவது, ''அம்மாவுக்கு அவருக்கும் திருமணம் முடிந்தபோது என்னிடம் அப்பா என்றே கூப்பிட சொன்னார். என்னை தன்னுடைய மகனாகவே நினைத்து பாசம் காட்டினார். ஒரு கட்டத்தில் அவருக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து ஆச்சு. ஆனாலும் என் மீது எப்பவும் போல பாசத்துடன் பழகினார். தங்கமான மனிதர்'' என்று பேசினார்.

top videos
    First published:

    Tags: Actor