முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கஸ்டடியில் இளையராஜாவோட மேஜிக், டிரெண்டிங் யுவன் - கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

கஸ்டடியில் இளையராஜாவோட மேஜிக், டிரெண்டிங் யுவன் - கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி

கஸ்டடி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நடித்தது குறித்து கீர்த்தி ஷெட்டி பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க அரவிந்த் சாமி, சரத்குமார், வெண்ணிலா, கிஷோர், பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரது பேட்டியில், என்னுடைய உப்பெனா படத்திலிருந்து தமிழ் ரசிகர்கள் ஆதரிக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பது ஃபன்னாக இருக்கும்.
 
View this post on Instagram

 

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)இதையும் படிக்க | நான் என் மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை - நடிகை கயல் ஆனந்தி!

இந்தப் படம் 1980 மற்றும் 90களில் நடப்பது போல இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் தீவிரமாக ஆராய்ச்சி எல்லாம் செய்து அந்த காலத்துக்கு ஏற்ப என்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டேன்.

top videos

    எல்லாருக்கும் இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவிருக்கும். இந்தப் படத்தில் இளையராஜாவின் மேஜிக் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் டிரெண்டிங் பிஜிஎம் என சேர்ந்து இந்தப் படத்துல வேற லெவலில் வந்திருக்கு. இதனை ரசிகர்கள் காண வேண்டும் என்று நான் ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Ilaiyaraja, Krithi shetty, Venkat Prabhu