முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஒன்றிய அரசு ஒன்றி வந்தால் சாராயத்தை ஒழித்துவிடலாம்' - வைரமுத்து ட்வீட்!

'ஒன்றிய அரசு ஒன்றி வந்தால் சாராயத்தை ஒழித்துவிடலாம்' - வைரமுத்து ட்வீட்!

வைரமுத்து

வைரமுத்து

மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்துவிடலாம். ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்றிய அரசு ஒன்றி வந்தால் சாராயத்தை ஒழித்துவிடலாம் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம்

தமிழக மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதோடு, பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சாராயம் ஒரு திரவத் தீ... கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி. நாம் விரும்புவது கள்ளச் சாராயமற்ற தமிழ்நாட்டை அல்ல; சாராயமற்ற தமிழ்நாட்டை; மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்துவிடலாம். ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Poet vairamuththu, Vairamuthu