முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''நிறைய அழுத்தங்களை தருது'' - ஃபர்ஹானா படத்துக்கு கார்த்தி விமர்சனம்

''நிறைய அழுத்தங்களை தருது'' - ஃபர்ஹானா படத்துக்கு கார்த்தி விமர்சனம்

கார்த்தி

கார்த்தி

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா படம் குறித்து நடிகர் கார்த்தி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ''பர்ஹானா படம் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் பண்ணும் வகையிலோ எடுத்த படம் அல்ல. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே ஃபர்கானாவை எடுத்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க | ''இதுதான் லாஸ்ட், இனி குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன்'' - அதிரடியாக அறிவித்த சிவாங்கி

இப்படம் நேற்று 12-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி, பொருளாதாரமும், தகவல் தொழில்நுட்பமும் நமது உறவுகளில் நிறைய அழுத்தங்களைக் கொடுக்கின்றன. ஃபர்ஹானா படம் இந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் இன்டென்ஸாக பதிவு செய்திருக்கிறது.

அழகான வசனங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி சார் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Actor Karthi, Actress Aishwarya Rajesh