நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் இருவர் ஜப்பானிலிருந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்க்க சென்னை வந்து, மூன்று நாட்கள் தங்கி நான்கு முறை பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பார்த்துள்ளனர்.
Terumi Kakubari Fujieda மற்றும் ISAO Endo ஆகிய இருவரும் வேலை நிமித்தம் காரணமாக சென்னை வந்தபோது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டனர். அதனால் அந்த சமயத்தில் இங்கேயே தங்க நேர்ந்திருக்கிறது. அப்போது நண்பர்கள் உதவியுடன் ஏராளமான தமிழ் திரைப்படங்களைப் பார்த்துள்ளனர். அதில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை பார்த்தப்போது அவருக்கு ரசிகராக இருவரும் மாறியுள்ளனர்.
அதன் பின் ஜப்பான் சென்ற அவர்கள் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை பார்த்து வந்துள்ளனர். அப்போது கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதை அறிந்த அவர்கள், இந்த படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க மூன்று நாள் பயணமாக சென்னை வந்தனர்.
மேலும் சென்னையில் பொன்னின் செல்வன் இரண்டாம் பாகத்தை நான்கு முறை பார்த்த அவர்கள், நடிகர் கார்த்தியை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் அவருடன் நீண்ட நேரம் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு, தங்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியானபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். அதில் சில ரசிகர்கள் ரஜினிகாந்த் படம் வெளியாகும் பொழுது சென்னை வந்து தமிழ் ரசிகர்களுடன் படம் பார்ப்பார்கள். இந்த நிலையில் ரஜினிக்கு பிறகு நடிகர் கார்த்திக்கு ஜப்பானிலிருந்து சென்னை வந்து அவருடைய ரசிகர்கள் படம் பார்த்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Karthi, Mani rathnam, Ponniyin selvan