முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''சினிமா துறைக்கு பேரிழப்பு ''- மனோபாலா, மயில்சாமி குறித்து கார்த்தி உருக்கம்

''சினிமா துறைக்கு பேரிழப்பு ''- மனோபாலா, மயில்சாமி குறித்து கார்த்தி உருக்கம்

கார்த்தி

கார்த்தி

நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த நடிகர் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த நடிகர் மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் கஜேந்திரன் ஆகியோர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வானது தி.நகர் சர் பி.டி. தியாகராஜா மகாலில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, ''கஜேந்திரன் அவர்கள் பெரிய ஆளுமை. மயில்சாமி சார் சிறுத்தை படத்திலிருந்து பழக்கம். தனக்கு மிஞ்சியது தான் தானம் என்பார்கள். ஆனால், தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர். கடன் வாங்கி பிறருக்கு தானம் செய்தவர். எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டன். எம்.ஜி.ஆர் போலவே உதவும் குணம்.

இதையும் படிக்க | விஜய் பிறந்தநாளுக்கு மாற்றம் வரும்... 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி... - விஜய் நற்பணி மன்ற நிர்வாகி தகவல்

மனோபாலா சார் எந்தவொரு நிகழ்வானாலும் பொறுப்பை எடுத்துக்கொண்டு முன்நின்று செய்பவர். ஈகோ இல்லாத மனிதர். எல்லோரிடமும் சாதரணமாக உண்மையாக பழகுபர். மூவரையும் இழந்தது சினிமாத்துறைக்கு பெரும் இழப்பு'' என்று பேசினார்.

top videos

    தொடர்ந்து பேசிய நடிகர் பொன்வண்ணன், ‘மூவரோடும், நான் சினிமாத்துறைக்கு வந்த நாளிலிருந்து பயணித்துள்ளேன்.மூன்று பேரும் மூன்று விதமான குணங்களை கொண்டவர்கள். மனோபாலா அண்ணனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். அடுத்த நாள் நேரத்தில் பேசிவிடுவார். புது டெக்னாலஜியை கற்றுக்கொள்வதில் மனோ பாலா அண்ணனுக்கு நிகர் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அனைவருக்கும் உதவி செய்வார்கள்’ என்று பேசினார்.

    First published:

    Tags: Actor Karthi