முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நான் பாஜகவில் இணைகிறேனா? - பரவும் தகவலுக்கு விளக்கமளித்த நடிகர் சுதீப்

நான் பாஜகவில் இணைகிறேனா? - பரவும் தகவலுக்கு விளக்கமளித்த நடிகர் சுதீப்

பசவராஜ் பொம்மை - கிச்சா சுதீப்

பசவராஜ் பொம்மை - கிச்சா சுதீப்

முதல்வர் பசவராஜ் பொம்மை கடினமான காலங்களில் எனக்கு துணையாக இருந்திருக்கிறார் என விளக்கமளித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட நடிகர் சுதீப். நடிகர் விஜய்யின் புலி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கன்னடம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ராந்த் ரோணா இந்திய அளவில் படம் பிரம்மாண்டமாக வெளியானது.

இந்த நிலையில் நடிகர் சுதீப் கர்நாடக மாநில பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் நடிகர் சுதீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுதீப், ''நான் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்யப்போகிறேன். பாஜக கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.

top videos

    முதல்வர் பசவராஜ் பொம்மை கடினமான காலங்களில் எனக்கு துணையாக இருந்திருக்கிறார்'' என விளக்கமளித்தார். இதனையடுத்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் சுதீப் பங்கேற்பது கட்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: BJP, Election, Karnataka