முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 35 வயதில் சின்னத்திரை நடிகர் எடுத்த விபரீத முடிவு - வெளியான அதிர்ச்சி காரணம்

35 வயதில் சின்னத்திரை நடிகர் எடுத்த விபரீத முடிவு - வெளியான அதிர்ச்சி காரணம்

கன்னட நடிகர் சம்பத் ஜே ராம்

கன்னட நடிகர் சம்பத் ஜே ராம்

பிரபல கன்னட நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் சம்பத் ஜே.ராம். சமீபத்தில் இவர் நடித்த ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. மேலும் இவர் நடித்த அக்னி சாக்ஷி என்ற தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

35 வயதாகும் நடிகர் சம்பத்திற்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று நீலமங்கலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | படம் முழுக்க வரும் ஏலியன்.. இந்தியாவில் முதல் படம் .... வெளியானது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் அப்டேட்

பிரபலங்கள் பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். கடந்த சில வருடங்களாக அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதுவும் அவர் தற்கொலைக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Actor