முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’பெரிய தாக்கம்.. அப்பாவுடன் பாருங்கள்’ - பள்ளி மாணவிகளுக்கு ’ராஜா மகள்’ படம் பார்க்க ஏற்பாடு செய்த ஆசிரியர்!

’பெரிய தாக்கம்.. அப்பாவுடன் பாருங்கள்’ - பள்ளி மாணவிகளுக்கு ’ராஜா மகள்’ படம் பார்க்க ஏற்பாடு செய்த ஆசிரியர்!

ராஜா மகள்

ராஜா மகள்

பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

'ராஜா மகள்' என்ற திரைப்படத்தை தங்கள் தந்தையுடன் படத்தை பார்க்க தன் பள்ளி மாணவிகளுக்கு பிரத்தியேக காட்சியை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஹென்றி என்பவர் இயக்கத்தில் 'ராஜா மகள்' என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அப்பா - மகள் உறவை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரமணீயம் சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ராஜா மகள் படத்தை பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். மேலும் ராஜா மகள் திரைப்படம் தனக்கும் தன் மகளுக்கும் ஏற்படுத்திய தாக்கத்தை போலவே, தன்னுடைய பள்ளி மாணவிகளும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக இன்ரு (22 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் பள்ளி மாணவிகள் தங்கள் தந்தையுடன் படத்தை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.  அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Tamil Cinema