முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'அவருடன் இணைந்து நடித்த நாட்கள்....' - நடிகர் சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

'அவருடன் இணைந்து நடித்த நாட்கள்....' - நடிகர் சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

கமல்ஹாசன் - சரத்பாபு

கமல்ஹாசன் - சரத்பாபு

நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

இதையும் படிக்க |  ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார்.

அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kamal Haasan