முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: அபூர்வ சகோதரர்கள் கதை உருவான விதம்... - கமல் சொன்ன சீக்ரெட்- ஆச்சரியப்பட்ட விஜய் சேதுபதி!

Video: அபூர்வ சகோதரர்கள் கதை உருவான விதம்... - கமல் சொன்ன சீக்ரெட்- ஆச்சரியப்பட்ட விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி - கமல்ஹாசன்

விஜய் சேதுபதி - கமல்ஹாசன்

அபூர்வ சகோதரர்கள் படம் உருவான விதம் குறித்து விஜய் சேதுபதியிடம் கமல்ஹாசன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் புதுமையான முயற்சிகளை எப்பொழுதும் செய்யத் தயங்காதவர். அப்படி அவரது முயற்சிகள் பின்னாட்களில் கொண்டாடப்பட்டாலும் வெளியானபோது அந்தப் படங்கள் வெற்றி பெற்றதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி சராசரியை விட உயரம் குறைவானவர் வேடத்தில் நடிக்க கமல் திட்டமிட்டார். அந்தப் படம் வெளியாகி அதுவரை தமிழ் சினிமாவிலிருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது. அந்தப் படம் தான் அபூர்வ சகோதரர்கள். அபூர்வ சகோதரர்கள் வெளியாகி நேற்றுடன் 34 வருடங்களாகிறது. டெக்னாலஜி வளர்ச்சி பெரிதாக இல்லாத அந்தக் காலத்தில் கமல் எப்படி உயரம் குறைவான கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்பது இன்றளவும் பலருக்கும் ஆச்சரியமாக இருந்துவருகிறது.

இந்தப் படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் கதை எழுத, கமல்ஹாசன் திரைக்கதை அமைத்திருப்பார். கிரேசி மோகன் வசனம் இந்தப் படத்தின் காமெடி காட்சிகளுக்கு பெரிதும் கைகொடுத்தன. சிங்கிதம் ஸ்ரீநிவாசராவ் இந்தப் படத்தை இயக்கினார். இளையராஜாவின் இசையில் அண்ணாத்த ஆடுறார், ராஜா கைய வச்சா என ஒவ்வொரு பாடல்களும் அல்டிமேட்டாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் உரையாடினர். அப்போது அபூர்வ சகோதரர்கள் படம் உருவான விதம் குறித்து விஜய் சேதுபதியிடம் கமல் சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, பஞ்சு அருணாச்சலத்திடம் சகலகலா வல்லவன் படத்தில் அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டினேன்.

இதையும் படிக்க |  எனக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்... விமானத்தில் பெண் பயணிக்கு அஜித் செய்த உதவி... வைரலாகும் பதிவு

அதனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். பின்னர்  எங்களிடம், அந்த உயரம் குறைவான கதாப்பாத்திரம் தான் ஹீரோ. அதனை உருவாக்க நீங்க படுகின்ற கஷ்டம் எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கும்போது அந்தக் கதாப்பாத்திரத்தை தான் பார்ப்பேன்.

top videos

    அவனுக்கு இன்னொரு தம்பி இருந்தான். அவன் உயரமா இருந்தான். உயரம் குறைவானவாகவே நடித்தால் பார்வையாளர்கள் கோபப்படுவார்கள். அதனால் உயரமானவன் ஒருத்தனை கொண்டுவா. 4 பேர் சேர்ந்து அப்பாவை கொன்னுடுறாங்க. பிள்ளைகள் பிரிஞ்சிடுறாங்க. அவங்க வளர்ந்து பழிவாங்குறாங்க. அவ்ளோதான அப்படினு சொன்னாரு. அந்தப் படத்தின் கதையை இப்படி தான் உருவாக்கினோம். என்று பேசினார். இதனைக் கேட்கும் கமல் ஆச்சரியமடைந்தார்.

    First published:

    Tags: Kamal Haasan